சினிமா துளிகள்

வெங்கட் பிரபுவிடம் இப்படி ஒரு திறமையா? வியந்து போன ரசிகர்கள்..

இயக்குனர் வெங்கட் பிரபு என்சி 22 படத்தை இயக்கி வருகிறார். இவரின் வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு 'சென்னை -28' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான, மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மதலீலை போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது இவர் நாகசைதன்யா நடிப்பில் என்சி22 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா "என்சி22 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தீபாவளி ஸ்பெஷல்.. மறைந்திருக்கும் திறமை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்