29

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்..!

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

தினத்தந்தி

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கேரளா அணியில் ஜார்ஜ் டையஸ் ஆட்டத்தின் 52 வது மற்றும் 55 வது நிமிடத்தில் என 2 கோல்கள் அடித்தார். மேலும் லூனா ஆட்டத்தின் 90 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்