சிப்காட் (ராணிப்பேட்டை),
வாலாஜா பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றி, வாலாஜாவை அடுத்த அனந்தலை ஊராட்சி திருமலை நகர் பகுதியில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருதாக கூறப்படுகிறது. இதற்கு திருமலை நகர் பகுதி பொதுமக்கள் இங்கு கோவில், ஆசிரமம் உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த வழியாகத்தான் சென்று வர வேண்டும். எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிப்காட்டில் உள்ள மதுபானக்கிடங்கு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மதுபானக்கிடங்கு மேலாளர் பால்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.