சினிமா துளிகள்

கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல... கமல்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வரும் கமல்ஹாசன், கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல என்று கூறியிருக்கிறார்.

தினத்தந்தி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல... என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து