சினிமா துளிகள்

ஜெயலலிதா வாழ்க்கை படம்; புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமாவாக தயாராகி உள்ளது.

தினத்தந்தி

இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன.

விஜய் இயக்கி உள்ளார். ஏற்கனவே கங்கனா ரணாவத், அரவிந்த சாமி தோற்றங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தலைவி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதைத் தொடர்ந்து நேற்று ஜெயலலிதா வேடத்தில் வரும் தனது புதிய புகைப்படங்களை கங்கனா ரணாவத் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

தலைவி படத்தில் நடித்தது குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, நடுத்தர குடும்பத்தில் இருந்து 16 வயதில் சினிமாவுக்கு வந்தது. ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத கதாபாத்திரம் எனக்கு ரத்தமும் சதையுமாக கிடைத்தது. கதாபாத்திரத்தை மிகவும் நேசித்தேன். ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆவது வரை உள்ள காட்சிகள் படத்தில் இருக்கும்'' என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது