சினிமா துளிகள்

கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக நிற்கும் ஜூனியர் என்டிஆர்.. போஸ்டர் வைரல்

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தேவரா' என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு