ஹாலிவுட் நடிகை ஹிலாரி சுவாங்; பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் 
சினிமா துளிகள்

கமலின் ‘பாபநாசம்' ஹாலிவுட்டில் ரீமேக்

கமல்ஹாசன், கவுதமி ஜோடியாக நடித்து திரைக்கு வந்த பாபநாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காக இது தயாரானது. இரண்டு மகள்களின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெண் போலீஸ் அதிகாரியின் மகனை, மனைவியும், மகளும் சேர்ந்து கொலை செய்கிறார்கள். அந்த பிணத்தையும், கொலை செய்த ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து சட்டத்தின் பிடியில் இருந்து அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியிலும் எ ஷிப் வித்தவுட் எ ஷெப்பர்டு' என்ற பெயரில் ரீமேக்காகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாபநாசம் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய முயற்சி நடப்பதாக ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் பெண் நடிப்பது போல் திரைக்கதையை மாற்றி இருப்பதாகவும், அதில் பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி சுவாங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு