மாவட்ட செய்திகள்

அரியாங்குப்பத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா ரங்கசாமி பங்கேற்பு

அரியாங்குப்பத்தில் புதுச்சேரி காமராஜர் சமூக நலப்பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி காமராஜர் சமூக நலப்பேரவை சார்பில் அரியாங்குப்பத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு முன்னாள் சபாநாயகர் சபாபதி தலைமை தாங்கினார். விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கலந்து கொண்டு காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியையொட்டி 100 மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் கோசலராமன், பாலபாஸ்கர், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அரியாங்குப்பத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக காமராஜர் சமூக நலப்பேரவை சார்பில் வீராம்பட்டினம் மெயின் ரோட்டில் முக்கிய சந்திப்பு பகுதியில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. காமராஜர் பிறந்த நாள் விழாவில் அதனை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரங்கசாமி கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.