தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் SR பிரபு அவர்களின் Dream warrior Pictures விளங்கி வருகிறது. அருவி, என் ஜி கே, கைதி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.
படத்தின் கதையை கேட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கண்கலங்கி விட்டாராம். 25 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி யிருந்த அமலா, இந்த படத்தில் அம்மாவாக நடிக்கிறார். மகனாக சர்வானந்த் நடிக்கிறார். ஸ்ரீ கார்த்திக் டைரக்டு செய்கிறார். படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.