மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல்

மதுராந்தகம் நகராட்சியில் சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அந்த பகுதி பொதுமக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.