கிரீடம், மதராசபட்டினம், தலைவா ஆகிய படங்களை இயக்கிய விஜய், இந்த படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில், பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
இவர், ஜெயலலிதாவின் ஆரம்ப காலம் மற்றும் பிற்பகுதி படத்துக்காக உடம்பை கூட்டியும், குறைத்தும் நடித்து இருக்கிறார். இதை அவருடைய பயிற்சியாளரால் நம்பவே முடியவில்லை. இப்போது கங்கனா ரணாவத் உடல் எடையை 20 கிலோ அதிகரித்து இருக்கிறார். அவரை பார்த்த படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுபோனார்கள்.
கங்கனா அடுத்த இரண்டு மாதங்களில் தனது புதிய படங்களுக்காக உடல் எடையை குறைக்க இருக்கிறார். அடுத்து ஒரு படத்தில், அவர் இந்திய ராணுவ விமானியாக நடிக்கிறார்!