மாவட்ட செய்திகள்

கன்னிவாடி அருகேஇடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

கன்னிவாடி அருகேஇடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

மூலனூர்,

கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட 1- வது வார்டு மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆன காரணத்தால் தற்போது அந்த மேல்நிலைத் தொட்டியின் தூண்கள் கரைகள் உடைந்து கம்பிகள் மட்டுமே வெளியே தெரியும் நிலையில் உள்ளது.

மேலும் குடிநீர் தொட்டியின் அடிப்பகுதி சிதிலமடைந்து காணப்படுவதால் எந்த நேரமும் கீழே விழும் நிலை உள்ளது. மேலும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் இந்த குடிநீர் தொட்டி உள்ளதால் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த குடிநீர் தொட்டியை சரி செய்து தர வேண்டுமாய் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.