விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் என பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த பிறகும், யாருடனும் இணைத்து கிசு கிசு வரவில்லை என்பதில், கீர்த்தி சுரேசுக்கு மகிழ்ச்சி.
அடுத்து இவர் விஜய்யுடன் நடித்துள்ள சர்கார் படம் வெளிவர இருக்கிறது. விக்ரமுடன் நடித்துள்ள சாமி-2 சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். தனது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
தென்னிந்திய கதாநாயகிகளில் இப்போது கீர்த்தி சுரேஷ்தான் நம்பர்-1 நாயகி என்று அவருடைய ரசிகர்கள் பெருமையாக கூறுகிறார்கள்!