சினிமா துளிகள்

கே.ஜி.எஃப்-2 வெற்றி - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

கே.ஜி.எஃப்-2 படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

தினத்தந்தி

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ.133 கோடி மேல் வசூல் செய்து சாதனை செய்திருந்தது. 'கேஜிஎப் 2' படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் பாக்ஸ் ஆபிசில் தெடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 500 கேடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்தது. இதன் மூலம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில், 'பென்டாஸ்டிக் பீஸ்ட்: தி சீக்ரெட் ஆப் டம்பிள்டேர்' படத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை சுமார் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், கே.ஜி.எஃப்-2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கோவாவில் கேக் வெட்டி படக்குழு கொண்டாடி உள்ளது. இதில் நடிகர் யஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை