மும்பை

டிரைவரை கொன்று கார் திருட்டு; 3 பேருக்கு வலைவீச்சு

டிரைவரை கொன்று காரை திருடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

வசாய், 

டிரைவரை கொன்று காரை திருடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உடல் மீட்பு

பால்கரை சேர்ந்தவர் ஆசிப்(வயது29). டிரைவர். சம்பவத்தன்று 3 பேர் நாசிக் திரிம்பகேஸ்வரர் கோவிலுக்கு சவாரி வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்பேரில் ஆசிப் 3 பேரையும் அழைத்து கொண்டு காரில் புறப்பட்டு சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் அம்போலி காட் அருகே ஆண் பிணம் கிடந்ததை போலீசார் மீட்டனர்.

கார் திருட்டு

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அது காணாமல் போன டிரைவர் ஆசிப் என தெரியவந்தது. அவரது கார் காணாமல் போனதால் போலீசார் விசாரித்தனர். சவாரிக்கு அழைத்து சென்ற 3 பேர் ஆசிப்பை கொலை செய்து காரை திருடி சென்றது தெரியவந்தது. அந்த கார் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் தனிப்படையினர் அவர்களை பிடிக்க அங்கு விரைந்து உள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை