மாவட்ட செய்திகள்

அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பலியானார்.

கரூர்,

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள லிங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் புலியூரில் உள்ள சிமெண்டு ஆலை அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சிவசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவசாமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து, சிவசாமி உடலை பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.