காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இந்த பணிகளை கே.பி.முனுசாமி எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், பொறியாளர் சையத், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தென்னரசு, காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ராஜன், மீனவர் அணி செயலாளர் கன்னியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.