மாவட்ட செய்திகள்

குடிமங்கலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

குடிமங்கலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

குடிமங்கலம்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலைவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு அமலில் உள்ள போதும் அதையும் மீறி வெளியில் நடமாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்கு உள்ளேயும் இ-பாஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குடிமங்கலம் வழியாக பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. ஊரடங்கு விதிகளைமீறி வெளியில் சுற்றுபவர்களை கண்டறியும் வகையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் குடிமங்கலம் நால் ரோட்டில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், செந்தில்குமார், சமாதானபிரபு, மற்றும் அதிகாரிகள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.