குடகு:
குடகில் நிலச்சரிவு
குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலசரிவால் பொதுமக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர். ஆனால் மாநில அரசு சார்பில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூருவை சேர்ந்த சமுக ஆர்வலர் கீதா மிஸ்ரா, கர்நாடக ஐகோர்ட்டில் குடகு நிலச்சரிவு குறித்து அரசு ஆய்வு நடத்தவேண்டும். மேலும் பாதிப்பிற்கான காரணம் குறித்து உரிய அறிக்கை அளிக்கவேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி இரு தரப்பின் வாதங்களை கேட்டார்.
அரசுக்கு நோட்டீஸ்
பின்னர், குடகு நிலசரிவு குறித்து இதுவரை அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. நிலசரிவிற்கான காரணம் தெரியவந்ததா. அந்த நிலச்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும் இந்த தொடர் நிலசரிவால் பொதுமக்கள் பீதியடைந்திருப்பதால் மாநில அரசு தனி குழு அமைத்து ஆய்வு நடத்தி உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.