புதுச்சேரி

வக்கீல்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து புதுவையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

புதுச்சேரி

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மக்களின் நலனுக்கு எதிராக 3 புதிய சட்டங்களை மாற்றியமைத்து செயல்படுத்த உள்ள மசோதாக்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புதுவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் துணைத்தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுந்தரம், இணை செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து