சினிமா துளிகள்

சந்திரமுகி பெயரை வாங்கிய லைகா நிறுவனம்

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து லைகா நிறுவனம்விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.

இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். இதில் ராகவா லாரன்ஸ் நடிக்க சம்மதிக்கவே அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சந்திரமுகி 2 இப்படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் சம்மதித்தது.

இந்நிலையில் படத்தின் தலைப்பை பெறுவதில் முதல் பாகத்தைத் தயாரித்த சிவாஜி கணேசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்