மும்பை

'லைப் லைன்' எக்ஸ்பிரஸ் ராய்காட் வருகை- 30-ந் தேதி வரை பொதுமக்களுக்கு சிகிச்சை

ரெயில்வே நிர்வாகம் மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து 'லைப் லைன்' எக்ஸ்பிரஸ் ராய்காட் வருகை

தினத்தந்தி

மும்பை,

ரெயில்வே நிர்வாகம் மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து 'லைப் லைன்' எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி வருகிறது. இந்த ரெயில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக மருத்துவ வசதி கிடைக்காத மக்களுக்கு இந்த ரெயில் மருத்துவ சேவை மிகவும் உதவிகரமாக உள்ளது.

இந்தநிலையில் இந்த லைப் லைன் எக்ஸ்பிரஸ் தற்போது மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோரேகாவ் பகுதிக்கு சென்று உள்ளது. இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க உள்ளது. இங்கு சிகிச்சை பெற விரும்பும் மக்கள் கோரேகாவ் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரோகா அரசு ஆஸ்பத்திரியை தாடர்பு கொள்ள வேண்டும் என ராய்காட் மாவட்ட அதிகாரி கிரன் பாட்டீல் கூறியுள்ளார். லைப் லைன் எக்ஸ்பிரசில் ஆபரேஷன் தியேட்டர் உள்பட பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை