மாவட்ட செய்திகள்

சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பந்தட்டை:

போலீசார் சோதனை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் குடிகாடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் அனுக்கூர் குடிகாடு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த அழகிரிசாமி (வயது 45) என்பவர் தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

7 லிட்டர் சாராயம்...

இதையடுத்து தோட்டத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 7 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 30 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அழகிரிசாமியை கைது செய்த போலீசார், அவரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.