விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் விக்கிரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விக்கிரமங்கலம் பாப்பாத்தி ஏரி அருகே மது விற்ற கோரைக்குழி நடுத்தெருவைச் சேர்ந்த மோகன்தாஸ்(வயது 22) என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.