மாவட்ட செய்திகள்

நெல்லை: மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது மது பாட்டில்களை பறிமுதல்

நெல்லை:

நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நேற்று நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நெல்லை மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 37) என்பதும், அவர் அந்த பகுதியில் மது விற்று கொண்டு இருந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார், மகேந்திரனை கைது செய்து, 61 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.