சினிமா துளிகள்

4 மொழிகளில் ‘லூசிபர்’

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஒடியன்’ படத்திற்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் ‘லூசிபர்.’

தினத்தந்தி

இது மோகன்லால் நடிப்பில் உருவாகும் படம் என்பதை விடவும், நடிகர் பிருத்விராஜ் இயக்கும் முதல் படம் என்பது தான் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமாகும். அது மட்டுமின்றி, ஒரு முறை இந்தப் படம் பற்றி பிருத்விராஜ் குறிப்பிடும்போது, இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே எதிர்மறையான கதாபாத்திரங்கள் தான் என்று சொன்னது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல் நிறைந்த திரில்லர் படமாக லூசிபர் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மோகன்லாலுடன் மஞ்சுவாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய், சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன், பாலா உள்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் பிருத்விராஜூம் நடிக்க இருக்கிறார். திருவனந்தபுரம், கொச்சி, மும்பை, லட்சத்தீவு, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய இடங்களில் நடந்த இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமே வெளியாகி வந்த மலையாளப் படம் ஒன்று, முதன் முறையாக லூசிபர் படத்தின் வாயிலாக 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதாவது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது