1960-ல் சிட்டாடல் தயாரிப்பில் வந்த விஜயபுரி வீரன் படத்தில் அறிமுகமானவர், பாண்டி ஆர்.செல்வராஜ். இவருடைய மகன் எஸ்.செல்வபாலாஜி, மஹா அவதார் ஐயப்பன் என்ற படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். இவர், கதாசிரியர் கே.தினகரிடம் உதவியாளராக இருந்தவர். இ.சாரா தயாரிக்கிறார்.
இந்த படத்தில், புதுமுகங்கள் செல்வின், இளங்கோ, சமி ஆகிய மூன்று பேரும் கதாநாயகனாக நடிக்க, இவர் களுக்கு ஜோடிகளாக 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கே.தினகர் வசனம் எழுதுகிறார். ந.குமார்லால் நேரு இசையமைக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் செல்வ பாலாஜி கூறும்போது, உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ஐயப்பன் பெருமைகளை சொல்லும் படம் இது என்றார்.