மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மராட்டியத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 76 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல 3 இறப்புகள் பதிவானத்தின் மூலம் இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 4 ஆயிரத்து 432 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் தொற்றில் இருந்து விடுபட்டபவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 3 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மராட்டியத்தில் 24 ஆயிரத்து 970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மும்பையில் மட்டும் 1,265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் இறந்துள்ளார். இது முந்தைய நாளை விட 16 சதவீதம் குறைவாகும்.
தற்போது மும்பையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 12 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. 19 ஆயிரத்து 610 பேர் இறந்துள்ளனர்.