மலையாள நடிகை மினு முனீர் 
சினிமா துளிகள்

குண்டர்கள் தாக்கியதாக மலையாள பிரபல நடிகை புகார்

பிரபல மலையாள நடிகை மினு முனீர். இவர் தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

கேரள மாநிலம் அலுவா பகுதியில் வசித்து வருகிறார். வாகனம் நிறுத்துவது தொடர்பாக மினுவுக்கும் சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. மினுவுக்கு அடி உதையும் விழுந்தது. இதுகுறித்து நெடும்பசேரி போலீசில் மினு புகார் அளித்துள்ளார்.

மினு கூறும்போது, எனது வீட்டின் அருகில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக சிலருடன் தகராறு ஏற்பட்டது. எனது வாகனத்தை அங்கு நிறுத்தக்கூடாது என்றனர். பின்னர் போலீசார் முன்னிலையிலேயே குண்டர்கள் என்னை தாக்கினர். இதனால் எனக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் அவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் போலீசார் உள்ளனர் என்றார். இந்த சம்பவம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்