மும்பை

பெண் சாமியாரை கத்தியால் குத்தி கொன்றவர் கைது

நாசிக் அருகே பெண் சாமியாரை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

நாசிக், 

நாசிக் அருகே பெண் சாமியாரை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் சாமியார்

நாசிக் மாவட்டம் ஷிண்டே கிராமத்தை சேர்ந்தவர் ஜனாபாய் (வயது45). பெண் சாமியாரான இவரிடம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களின் குடும்ப பிரச்சினைக்கு பரிகாரம் தேடி வருவார்கள். நாசிக் ரோடு பகுதியை சேர்ந்த நிகேஷ் பவார் (41) என்பவரும் தனது பிரச்சினைக்கு தீர்வு காண பெண் சாமியாரை சந்திக்க வந்தார். பெண் சாமியார் தெரிவித்த யோசனையின் படி செயல்பட்டும் நிகேஷ் பவாருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

கத்தியால் குத்தி கொலை

இதனால் ஆத்திரமடைந்த நிகேஷ் பவார் சம்பவத்தன்று கத்தியால் பெண் சாமியார் ஜனாபாயை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த ஜனாபாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பெண் சாமியார் ஜனாபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற நிகேஷ் பவாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...