திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள சுவிஷசபுரம் ஷாப்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வின் (வயது 45). தொழிலாளி. இவரது உறவுக்கார பெண்ணிடம் அழகப்பபுரத்தை சேர்ந்த மோகன் ராஜ் மகன் சரத் (28) என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதை செல்வின் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சரத் கல்லால் செல்வின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து, சரத்தை கைது செய்தார்.