ஏர்வாடி, மே:
திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி, அத்தியாவசிய காரணம் இன்றி மோட்டார் சைக்கிளில் சுற்றிய செட்டிமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.