மும்பை

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை குத்தி கொலை செய்தவர் குற்றவாளி- கோர்ட்டு அறிவிப்பு

சாக்கிநாக்காவில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

சாக்கிநாக்காவில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

கத்தியால் குத்தி கொலை

மும்பை சாக்கிநாக்கா கைரானி ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் சவுகான் (வயது45). இவர் நடைபாதையில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபாதையில் வசித்து வந்த 32 வயது பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இதற்கு அப்பெண் மறுத்து உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மோகன் சவுகான் பெண்ணை மர்ம உறுப்பில் கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன் சவுகானை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

குற்றவாளி என அறிவிப்பு

வழக்கு விசாரணையில் 37 பேர் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். சம்பவம் நடந்து 18 நாளில் அவர் மீதான குற்றப்பத்திரிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நீதிபதி பெண்ணை கொலை செய்த மோகன் சவுகான் குற்றவாளி எனவும், இவருக்கான தண்டனையை நாளை மறுநாள் (புதன்கிழமை) அறிவிப்பதாக தெரிவித்தார்.

----------------------

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்