image courtesy; @BCCIWomen twitter 
29

பெண்கள் உலகக்கோப்பை; ஸ்மிரிதி மந்தனா அபார சதம்!!

தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபார சதத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.

தினத்தந்தி

ஹாமில்டன்,

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது.ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார்.

அவர் சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது அபார சதத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.

அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுர் 81 ரன்களுடன் ஆடி வருகிறார்.

சற்று முன் வரை இந்திய அணி, 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு