முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த முடியும். மாம்பழத்தில், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும். வைட்டமின் சி, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். பிரீ ரேடிக்கல்களால் உண்டாகும் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் புறஊதாக்கதிர்கள் மற்றும் மாசுக்களால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6, வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் சருமத் துளைகளில் படியும் அழுக்கையும், கூடுதல் எண்ணெய்ப் பசையையும் நீக்கும். பாக்டீரியா மற்றும் தீமை செய்யக்கூடிய கிருமிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சுருக்கங்கள், கோடுகள், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஆகியவற்றை குறைக்கும்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த மாம்பழத்தைக்கொண்டு முக அழகை மேம்படுத்தும் வழிகள் இங்கே…