மாவட்ட செய்திகள்

நாய்கள் விரட்டியதால் பள்ளி வளாகத்தில் தஞ்சம் அடைந்த மான் வனத்துறையினர் மீட்டனர்

அரூர் அருகே உள்ள கொளம்பட்டி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி நேற்று ஒரு மான் ஆண்டிப்பட்டி புதூர் கிராமத்திற்குள் வந்தது.

அரூர்,

அரூர் அருகே உள்ள கொளம்பட்டி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி நேற்று ஒரு மான் ஆண்டிப்பட்டி புதூர் கிராமத்திற்குள் வந்தது. இந்த மானை நாய்கள் விரட்டி சென்றது. இதனால் அந்த மான் அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது. மான் வளாகத்திற்குள் புகுந்ததை பார்த்த மாணவமாணவிகள் கூச்சலிட்டனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து மானை மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த மானை மாணவமாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.