சினிமா துளிகள்

பலரும் கேலி செய்தார்கள் - ராஷி கண்ணா

அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷி கண்ணா, பலரும் கேலி செய்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

தினத்தந்தி

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது தனுசுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். அஜய் தேவ்கானுடன் இணைந்து ருத்ரா தி ஹெட்ஜ் ஆப் டாக்னஸ் என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சினிமாவில் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நிறைய அவமானங்களை எதிர்கொண்டேன். எனது உடல் தோற்றத்தை பார்த்து பலரும் கேலி செய்தார்கள்.

நான் அப்போது உடல் எடை கூடி குண்டாக இருந்தேன். என்னை பார்த்து சிலர் கேஸ் டேங்கர் லாரி என்று சொல்லி ஏளனம் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்று என்னை கேலி செய்தார்கள். இதனால் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பின்னர் கடும் உடற்பயிற்சிகள் செய்து எனது தேகத்தின் தோற்றத்தை வசீகரமாக மாற்றினேன்'' என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து