புதுச்சேரி

800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள மணப்பெண்ணின் திருமண உதவித்தொகையாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 800 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.2 கோடி வருகிற 22-ந்தேதி முதல் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இந்த தொகையானது தேதி வாரியாக (சீனியாரிட்டி அடிப்படையில்) 5-9-2022 வரை விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது