மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாமல் நகருக்குள் நுழைய முயன்றவர்களை காந்திநகரில் தடுத்து நிறுத்திய நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் காந்திநகர் பகுதியில் முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள், சரக்குவாகனம், பஸ்களில் பயணம் செய்தவர்களை தடுத்து நிறுத்திய சுகாதார துறை அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

முக கவசம்

மேலும் பஸ்களில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

மொத்தம் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் மொத்தம் ரூ.6,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டி நகர், நல அலுவலர் ராஜநந்தினி, சுகாராதர ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி, ஐயப்பன், சுகாதாரதுறை பணியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.