சினிமா துளிகள்

வெள்ளித்திரை விருந்தாக ‘மாயத்திரை’

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அசோக்குமார். இவர் ‘மாயத்திரை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

தினத்தந்தி

டூலெட், திரவுபதி ஆகிய படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். அறிமுக டைரக்டர் சம்பத்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் சம்பத்குமார் பேசுகையில், இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருக்காது. குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி படம். வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வரும் என்றார்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி