புதுச்சேரி
மணவெளி தொகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும். குப்பைகள், மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.