மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் பள்ளி பொது தேர்வுகளுக்கான முன்னேற்பாடு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது

நாமக்கல்லில் பள்ளி பொது தேர்வுகளுக்கான முன்னேற்பாடு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 உள்ளிட்ட பள்ளி பொது தேர்வுக்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயா, ராமன், தேர்வுத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுத்தேர்வின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி விளக்கி பேசினார். மேலும் தேர்வின் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்முறை தேர்விற்கான புறத்தேர்வாளர் மற்றும் அகத்தேர்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.