சினிமா துளிகள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவாக அரவிந்தசாமி-கங்கனா நடிக்கும் புகைப்படம்

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.

தினத்தந்தி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விஜய் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது. விஷ்ணு வர்தன் இந்தூரி, சய்லேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு விஜயேந்திரபிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கங்கனா ரணாவத், அரவிந்தசாமி தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்தநிலையில் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளையொட்டி நேற்று எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்தசாமியும், ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்தும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை புதிய தோற்றத்துடன் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த காலத்தை நினைவூட்டுவதாக புகைப்படம் உள்ளது என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்