மும்பை

நாலச்சோப்ராவில் மாயமான சிறுமி காட்டில் பிணமாக மீட்பு

நாலச்சோப்ராவில் மாயமான சிறுமி காட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை, 

நாலச்சோப்ராவில் மாயமான சிறுமி காட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.

சிறுமி மாயம்

நாலச்சேப்ரா பகுதியை சேர்ந்தவர் சிறுமி ரியா நிசாத்(வயது13). இவா சம்பவத்தன்று இரவு வீட்டருகே உள்ள கணபதி மண்டலுக்கு செல்வதாகவும், இரவு முழுவதும் மண்டலில் நடைபெறும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு காலை வந்துவிடுவதாக கூறிச் சென்றார். ஆனால் காலை சிறுமி வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் கணபதி மண்டல் பகுதியில் இருந்து சில கி.மீ. தூரத்தில் உள்ள மாங்குரோவ் காட்டில் சிறுமி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்