மாவட்ட செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.2¾ லட்சம் பறிமுதல்; உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் நடவடிக்கை

புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி கொண்டு சென்ற ரூ.2¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காய்கறி வியாபாரி

அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது லாரியில் வந்தவரிடம் ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து லாரியில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாளவாடியை அடுத்த பசுவன்தொட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மகேஷ் (வயது 31) என்பதும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை விற்று வசூலான பணத்தை கொண்டு வந்ததும், தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி உமாசங்கரிடம் ஒப்படைத்தனர்.