புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கண்காணிப்பு குழு

புதுவையில் துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக கண்காணிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக கண்காணிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

துப்புரவு தொழிலாளர்கள்

வெறும் கைகளால் கழிவுகளை அகற்றுதல், துப்புரவு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. இதனை தடை செய்ய சட்டமும் உள்ளது.

ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினர்கள் புதுவைக்கு அடிக்கடி வருகை தந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை.

கண்காணிப்பு குழு

இந்தநிலையில் இதனை கண்காணிக்கவும், துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை தலைவராக கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், தனித்தொகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், துப்புரவு தொழிலாளர் தேசிய ஆணைய உறுப்பினர், ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர், உள்ளாட்சித்துறை செயலாளர், இயக்குனர், நகராட்சிகளின் ஆணையர்கள் என 18 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு 6 மாதத்துக்கு ஒருமுறை கூடி துப்புரவு தொழிலாளர்களின் நிலை, அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைளை எடுக்கும். இதேபோல் மாவட்ட அளவிலும் கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து