திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (3.2.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரதவீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை தொழிற்பேட்டை, கோடீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல்,திருநெல்வேலி டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர்தெரு, பாரதியார்தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்குதெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூடன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (3.2.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:
கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.