திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி கிராமப்புறம் மற்றும் வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
பரப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (12.2.2026, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி AMRL, நவலடி மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (12.2.2026, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம்.
நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம்.
மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.