திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (7.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (7.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், துணைமின் நிலையங்களில் நாளை (7.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:
ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி.
அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.
மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.
கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திசையன்விளை, பணகுடி மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை (7.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:
களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலனகுளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கரைசுத்துஉவரி, கூட்டபணை, கூடுதாளை, குட்டம், விமணங்குடி.
பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.