மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த கட்டிட தொழிலாளி பலியானார்.

திருப்பூரில் மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த கட்டிட தொழிலாளி பலியானார்.

நல்லூர்

திருப்பூரில் மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த கட்டிட தொழிலாளி பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

திருப்பூர் பொல்லிக்காளிபாளையம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை 8 மணியளவில் கட்டிட வேலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருடைய மோட்டார் சைக்கிள் கோவில்வழி அருகே உள்ள பிள்ளையார் நகர், வாய்க்கால் மேடு பகுதியில் வேகமாக வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் 10 அடி பள்ளத்தில் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் விழுந்தார். அதில் அவருடைய முகத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் ரத்தம் வெளியேறி மயங்கி கிடந்துள்ளார்.

பலி

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ரவிக்குமார் விழுந்து கிடப்பதை பார்த்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரவிக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவேஇறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.